in ,

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் அரசியவாதிகள் தலையீடு!! – பலரின் வாய்ப்பு பறிபோகிறது?

தற்போதைய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு லட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில், யாழ்ப்பாணத்தில் அரசியல் செல்வாக்குடன் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

ஒரு லட்சம் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பங்கள் கோரபபட்டிருந்தது. வேலை வாய்ப்பற்றுள்ள – வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கே இந்த நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

விண்ணப்பித்தவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, நேர்முகத் தேர்வும் முடிந்துள்ளது. அதில் புள்ளிகள் அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது நியமனத்துக்காக கடந்த வாரம் மாவட்ட செயலகங்களுக்கு பெயர்ப் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பல புதிய பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.

முன்னர் விண்ணப்பித்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு, பலர் புதிதாக இணைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசியல் பின்புலத்துடன் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தப் பெயர்ப்பட்டியலில், யார் சிபாரிசு செய்துள்ளனர் என்பதும் பென்சிலால் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகளால் இந்த சிபாரிசுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, நியமனத்துக்காகக் காத்திருந்த பலர் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் என்று அந்தப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

What do you think?

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று!!

Residents in Western Province requested not to cross borders