in

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பம்

கர்ப்பிணிப் பெண்களுக்கான சினோஃபார்ம் கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் பணி இன்று காலை பிலியந்தல சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிமனையில் ஆரம்பமாகியது.

35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசெல குணவர்தனவும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் அசெல குணவர்தன, எதிர்காலத்தில் நாடுமுழுவதும் கர்ப்பிணிப் பெண்களுக்கான கோவிட்-19 தடுப்பூசி மருந்து வழங்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கோவிட்-19 தொற்று காரணமாக எட்டு கர்ப்பிணி பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

நாடுமுழுவதும் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க சுகாதார அமைச்சு சமீபத்தில் முடிவு செய்தது.

– Advertisement –

What do you think?

ரணில் விக்ரமசிங்கவால் 50 உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாது- ராஜித எம்.பி. – Thamilan

இராணுவத் தளபதி வெளியிட்ட மற்றுமொரு விடயம்