in

கல்முனையில் போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது – Thamilan

Post Views: 1

கல்முனை-சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் ஜஸ் ரக போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் உள்ளிட்ட ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேரை இன்று (03) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவரிடமிருந்து 330 மில்லிகிராம் ஜஸ் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதேவேளை சிலாபத்தைச் சேர்ந்த ஒருவர் 60 மில்லிக்கிராம் ஹரோயினுடனும், கடற்கரைப்பள்ளி வீதியைச் சேர்ந்த ஒருவர் 350 மில்லிக்கிராம் கேரளா கஞ்சாவுடனும், மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை 1,490 மில்லிக்கிராம் ஹரோயினுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்

இந்த சம்பவத்தில் கைது செய்தவர்கள் 20 தொடக்கம் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

What do you think?

கோவிட்-19 நோயால் பாதித்தோர் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லாவிடின் அறிவிக்கக் கோரிக்கை

35 கிலோ கிராம் கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் பருத்தித்துறையில் கைது