in

கூட்டமைப்பின் கொறடா பதவியிலிருந்து விலகினார் சிறிதரன் எம்.பி.!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொறடா (நாடாளுமன்றில் கட்சியின் ஒழுக்கத்தை நிலைநாட்டும் பதவி) பதவியில் இருந்து இந்த மாதம் 10ஆம் திகதியில் இருந்து விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அறிவித்துள்ளார்

கடந்த 5 ஆண்டுகளாகக் கூட்டமைப்பின் கொறடா பதவியில் இருந்தேன். கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கருத்தாடல்கள் தற்போது ஆரோக்கியமாக இல்லை. கொறடா பதவியை வைத்துச் சிறிதரன் பணம் சம்பாதிக்கின்றார் என்ற மாயைப் பரப்பி வருகின்றனர்.

அவ்வாறான பதவி எனக்குத் தேவையில்லை. அதனால் அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளேன். இது தொடர்பாகக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அறிவித்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவி மற்றும் கொறடா பதவி தொடர்பாக கூட்டமைப்புக்குள் விமர்சனங்கள் எழுந்திருந்தன.

தமிழ்த்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ, நாடாளுமன்ற உறுப்பினரான த.சித்தார்த்தனை கெறடா பதவியில் நியமிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

சில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், கூட்டமைப்பின் கொறடா பதவி தொடர்பாக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்திருந்தார்.

What do you think?

46 நாள்களேயான பச்சிளம் குழந்தையைப் பறிந்தெடுத்த கொரோனா!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகம்!!