in ,

கொட்டித் தீர்க்கிறது மழை!! – வெள்ளக் காடானது யாழ்ப்பாணம்!!

யாழ்ப்பாணம் நகரத்தில் நேற்றுக் காலை 8.30 மணி முதல் இன்று காலை 8.30 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 173.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் யாழ்ப்பாணம் திருநெல்வேலி அலுவலகம் தெரிவித்தது.

யாழ்ப்பாணம் நகருக்கு அடுத்தபடியாக திருநெல்வேலியில் 153.4 மில்லிமீற்றர் மழையும், அச்சுவேலியில் 68.7 மில்லிமீற்றர் மழையும், பருத்தித்துறையில் 40.1 மில்லிமீற்றர் மழையும், நயினாதீவில் 65.3 மில்லிமீற்றர் மழையும், சாவகச்சேரியில் 39.8 மில்லிமீற்றர் மழையும், தெல்லிப்பளையில் 35.0 மில்லிமீற்றர் மழையும் கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கிடைத்த மழைவீழ்ச்சி அண்மைக்காலத்தில் கிடைத்த அதிக மழைவீழ்ச்சியாகப் பதிவாகியுள்ளது.

ஓரிரவு பெய்த மழையால் யாழ்ப்பாணம் நகரப்பகுதியின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

நல்லூர், யாழ்ப்பாணம் நகரம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, காக்கைத்தீவு போன்ற பகுதிகளில் அதிகளவு வெள்ளம் தேங்கியுள்ளது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

What do you think?

கொரோனா தொற்றால் மேலும் 7 உயிரிழப்புகள்!! – 669 பேருக்கு கொரோனா உறுதி!!

கடந்து சென்றாலும் கதிகலங்க வைக்கும் புரேவி!! – வெள்ள அபாயத்தில் யாழ்ப்பாணம்!!