டென்மார்க்கில் மிங்க் வகை கீரிகள் பெரும் எண்ணிக்கையில் கொன்றொழிக்கப்பட்டு வரும் நிலையில், விலங்கு ஆர்வலர்கள் அதற்குப் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
டென்மார்க் உட்பட ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சாதுவான விலங்கே மிங்க். இவற்றின் அடர்த்தியான ரோமத்தைக் கொண்டு குளிருக்கு ஏற்ற உடைகள் தயாரிக்கப்படுகின்றன.
டென்மார்க்கில் ஃபர் தயாரிப்புப் பிரதானமாக இருக்கும் நிலையில், அதற்கு மிங்க்கின் பங்களிப்பு அதிகம். மிங்க் டென்மார்க் முழுவதும் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன.
மிங்க் விலங்குகளில் இருந்து புதுவகை கொரோனா வைரஸ் பரவுகின்றது என்றும், கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்புக்கு இது பின்னடைவு என்றும் தெரிவித்த டென்மார்க் பிரதமர் ப்ரெட்க்சென், டென்மார்க்கில் உள்ள 17 மில்லியன் மிங்க் விலங்குகள் அழிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
தற்போது மிங்க் விலங்களை அழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஃபர் உற்பத்தியாளர்கள் சங்க அறிக்கையின் படி 3 இல் 2 மிங்க் விலங்குகள் அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பலர் வேலையிழந்துள்ளனர் என்றும், இதைச் சீர் செய்ய இன்னும் மூன்றாண்டுகளாகும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
டென்மார்க் அரசு முன்னெடுத்துள்ள இந்த மிங்க் அழிப்பு நடவடிக்கைக்கு அந்த நாட்டின் எதிர்க்கட்சிகளும், வேறு பல தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறத்தில், மிங்க் தொடர்பான அறிவியல் அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இப்போது 10 மில்லியன் மிங்க் விலங்குகள் கொல்லப்பட்டுவிட்டன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.