in

சானிடைசர் பயன்படுத்துவதால் பட்டாசு வெடிப்பதில் மிக அவதானம்!!

கொரோனா தொற்றுக் காரணமாக அனைவரும் அடிக்கடி தொற்றுநீக்கிகளை (சானிடைசர் – sanitizer) பயன்படுத்தி கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளும் நிலையில், பட்டாசு போன்ற பொருள்களைக் கவனத்துடன் கையாள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அநேகமான தொற்று நீக்கிகளில் மதுசாரம் (அல்கஹோல்) பயன்படுத்தப்படுவதால் எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு பட்டாசு போன்றவற்றில் இருந்து வெளியாகும் புகை ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகளைப் பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதயப் பாதிப்புள்ளவர்கள் அதனால் பாதிப்படையக் கூடும்.

தீபாவளித் திருநாளைக் கொண்டாடும் அதேநேரம், உரிய பாதுகாப்புடன் செயற்பட்டு தேவையற்ற சம்பவங்களையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

What do you think?

இன்றைய ராசிபலன் | உங்களுக்கு எப்படி?

WATCH : Tendulkar’s & Lasith Malinga’s message to Mumbai Indians ahead of IPL 2020 final