யாழ்ப்பாணத்தில் வீதியால் சென்ற ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று புத்தூர் சந்திப் பகுதியில் நடந்துள்ளது. ஐ.மோகனதாஸ் (வயது-47) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீதியால் சென்றவரை இனந்தெரியாத ஒருவர் கத்தியால் குது்தி விட்டுத் தப்பியோடியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்துக்கு இலக்கான மோகனதாஸ் உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.