in ,

சிகை அலங்கரிப்பு நிலையம் நடத்துபவருக்கு கொரோனா!! – பலர் தனிமைப்படுத்தலில்!!

மன்னாரில் சிகை அலங்கரிப்பு நிலையம் ஒன்றை நடத்துபவருக்குக் கொரோனாத் தொற்று இன்று (18) உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் 426 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மன்னாரில் சிகை அலங்கரிப்பு நிலையம் நடத்தும் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு அண்மைய நாள்களில் சென்றவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.

What do you think?

யாழ். நகரில் வீடுகள் உடைத்து கொள்ளையிட்ட கும்பல் சிக்கியது!!

P2P பேரணியில் பங்குகொண்ட பருத்தித்துறை இளைஞன் கைது!! – நடந்தது என்ன?