in

ஜனவரி 11ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பம்! – அரசு அறிவிப்பு!!

முதலாம் தவணைக் கற்றல், கற்பித்தலுக்காகப் பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஜனவரி மாதம் 11ஆம் திகதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இந்தத் தினத்தில் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஜனவரி 11ஆம் திகதி முதல் தரம் 1 முதல் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளையும், முன்பள்ளிகள் மற்றும் பகல் நேர பராமரிப்பு நிறுவனங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்படும்.

பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியம் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட இரு வாரங்களுக்கு ஒருமுறை சுகாதார மேம்பாட்டுக் குழு கூடி நடவடிக்கை எடுக்கும்.

யாரேனும் ஒரு மாணவர் உடல் நிலை சரியில்லாது இருந்தால் அல்லது மாணவரின் வீட்டினர் சுகவீனமுற்றிருந்தால் அல்லது பி.சி.ஆர். முடிவுக்காகக் காத்திருந்தால் அந்த மாணவர்கள் பாடசாலை செல்லக்கூடாது. அதைப் பெற்றோர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

What do you think?

Residents in Western Province requested not to cross borders

அறிவியல்நகர் காட்டுக்குள் ரி-56 ரகத் துப்பாக்கிகள்!!