யாழ்ப்பாணத்தில் மூன்றாவது நாளான இன்றும் தங்கத்தின் விலை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. கடந்த மூன்று நாள்களில் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாவால் சரிவடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இன்று (செப்ரெம்பர் 24) வியாழக்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 90 ஆயிரத்து 750 ரூபாவாக காணப்பட்டது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 91 ஆயிரத்து 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று 99 ஆயிரம் ரூபாவாக உள்ளது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் 99 ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டது.