in

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோவுக்குக் கொரோனா தொற்று!!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

கால்பந்து நட்சத்திர வீரர் ரொனால்டோ தற்போது ஜூவென்டஸ் அணியில் விளையாடி வருகின்றார். 35 வயதான இவர் உலகில் முன்னணியில் உள்ள ஒரு கால்பந்து வீரராவார்.

யுஃபா நேசன்ஸ் லீக் தொடரில் போர்த்துக்கல் – சுவீடன் அணிகளுக்கிடையே நாளை புதன்கிழமை கால்பந்தாட்டம் நடைபெறவுள்ளது. அதில் ரொனால்டோ பங்கேற்கவிருந்தார்.

ஆனால் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர் அந்த ஆட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ள போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம், “கொவிட் 19 பரிசோதனையில் ரொனால்டோ தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அதனால் அவர் சுவீடனை எதிர்கொள்ள மாட்டார்” என்று கூறியுள்ளது.

ரொனால்டோவுக்கு தொற்று உறுதியானமையை அடுத்து அணியின் அனைத்து வீரர்களும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்கள் யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

ரொனால்டோ தற்போது தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

What do you think?

ரின் மீன், சீனி உட்படச் சில பொருள்களின் இறக்குமதி வரி நீக்கம்!!

கொடிகாமத்தில் தம்பதியைக் கட்டிவைத்து 16 பவுண் நகைகள், பணம் கொள்ளை!!