in

“போட்டோ சூட்”டில் படகு கவிழ்ந்து மணமகன், மணமகள் உயிரிழப்பு!!

“போட்டோ சூட்” நடத்தியபோது படகு கவிழ்ந்ததில் ஆற்றில் மூழ்கி மணமகனும், மணமகளும் உயிரிழந்தனர்.

திருமணத்துக்கு முந்தைய “போட்டோ சூட்” நடத்தியபோதே அவர்கள் படகு கவிழ்ந்து உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம், மசூரை அடுத்த முதுக்குத்தூரைச் சேர்ந்த சந்துரு மற்றும் சசிகலாவுக்குக் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.

எதிர்வரும் 22ஆம் திகதி இவர்களுக்குத் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், திருமணத்துக்கு முன்னர் “போட்டோ சூட்” நடத்த இவர்கள் ஆசைப்பட்டனர்.

அந்த ஆசையே அவர்களுக்குக் காலனாக மாறியது. ஆழம் மிக்க காவிரி ஆற்றில் “போட்டோ சூட்” நடத்தியபோது படகு கவிழ்ந்ததில் அவர்கள் நீரில் மூழ்கினர்.

படம்பிடிப்பாளர்கள் ஒரு படகிலும், மணமக்கள் இன்னொரு படகிலும் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு டைட்டானிப் திரைப்படப் பாணியில் மணமக்களை நிறுத்திப் படம் எடுக்க முயன்றபோதே படகு கவிழ்ந்துள்ளது.

படகின் ஒரு முனையில் ஒரு முனையில் மணமக்களையும், மறுமுனையில் படகோட்டியையும் நிற்க வைத்துள்ளனர் படப்பிடிப்பாளர்கள். படகின் முன்பக்கப் பாரம் தாங்க முடியாது படகு கவிழ்ந்தது.

மணமக்கள் நீரில் மூழ்கிப் பரிதாபகரமாக உயிரிழந்தனர். படகோட்டி நீந்திக் கரை சேர்ந்து தப்பியுள்ளார். புகைப்படக் குழுவில் எவருக்கும் நீச்சல் தெரியாததால் மணமக்களைக் காப்பாற்ற முடியவில்லை.

பின்னர் படகில் சென்று மணமக்கள் உடல்களைப் பொலிஸார் மீட்டெடுத்தனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமணப் புகைப்படங்கள் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் பொக்கிஷம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் தற்பாலத்தில் திருமண “போட்டோ சூட்” என்பது எல்லை மீறிச் செல்கின்றது.

வித்தியாசமாகக் கற்பனைத் திறன் வெளிப்படுத்தப்படுகின்றது என்று கூறப்பட்டாலும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி மேற்கொள்ளப்படும் “போட்டோ சூட்”கள் ஆபத்தில் முடியும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஓர் சாட்சி.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. தற்போது எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் “போட்டோ சூட்”களும் அப்படித்தான்.

What do you think?