in

மன்னார்-பேசாலையில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு

மன்னார்-பேசாலை 8ஆம் வட்டாரம் யூட் வீதி காட்டு பகுதியில் மறைத்து வைத்திருந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதிகளை பேசாலை பொலிஸார் நேற்று (16) மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் 14.175 கிலோகிராம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கஞ்சா பொதிகள் சுமார் 14 இலட்சம் ரூபா பெறுமதியானவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா மேலதிக விசாரணையின் பின் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்தனர்.

The post மன்னார்-பேசாலையில் 14 இலட்சம் ரூபா பெறுமதியான கஞ்சா மீட்பு appeared first on Thamilan – Sri Lanka News.

What do you think?

‘மூடப்பட்ட தேயிலை தொழிற்சாலைகளை கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்ற நடவடிக்கை’

Australian cricketer Aaron Summers charged with child sexual offences