in

மயங்க் அகர்வால் அதிரடி வீணானது!! – திரில் வெற்றி பெற்றது டெல்லி கப்பிட்டல்ஸ்!!

தற்போது நடைபெற்றுவரும் ஐ.பி.எல். 2020 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லி கப்பிட்டல்ஸ் அணி “திரில்” வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் சுப்பர் ஓவர் வரையில் சென்றது.

இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு டுபாயில் ஆரம்பமானது. டொஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தெரிவு செய்தது.

டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவான், சிம்ரோன் ஹெட்மையர் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் பவிலியன் திரும்பினர்.

நான்காவது விக்கெட்டுக்கு அணித் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. அதேசமயம் அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடியது. ரிஷப் பண்ட் 31 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் அய்யர் 39 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் ஸ்டாய்னிஸ் அதிரடி காட்டினார். அவர் 20 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் கடந்தார். ஸ்டாய்னிஸ் 21 பந்தில் 53 ரன்கள் விளாசினார். இறுதியில், டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணி சார்பில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், காட்ரெல் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுக்களையும், ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல் 21 ரன்கள் எடுத்திருந்திருந்தபோது ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. இதனால் அந்த அணி 5 விக்கெட்டுக்கு 55 ரன்களுடன் தத்தளித்தது.

மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் தனியாக போராடினார். கிடைத்த பந்துகளை பவுண்டரி, சிக்சராக பறக்கவிட்டார். அவர் இறுதி வரை போராடினார். அகர்வால் 60 பந்தில் 89 ஓட்டங்கள் குவித்து அவுட்டானார்.

பஞ்சாப் அணியும் 20 ஓவரகளில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் சமனிலையில் முடிந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் அணி 2 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி வீரர் ரபாடா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய டெல்லி கப்பிட்டல்ஸ் அணி 3 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

What do you think?

ஒழுக்காற்று விசாரணைக்கு நிபந்தனை விதித்துள்ள மணிவண்ணன்!

IPL : “Umpire should be the man of the match” Virender Sehwag slams umpire after Super Over thriller