in

மிருசுவில் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்டு தொடரும் நிகழ்வு; நடவடிக்கை எடுக்க ஆறு.திருமுருகன் வலியுறுத்து

மிருசுவில் பிள்ளையார் கோவிலை இடித்தவர்கள் மீது உடன் நடவடிக்கை எடுங்கள் என்று அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

சைவமக்களின் வழிபாட்டுத் தலங்களை அழிக்க முற்படும் அநாகரீக செயற்பாடு வேதனை தருகிறது.

மிருசுவிலில் மிக நீண்டகாலமாக மக்கள் வழிபாடு செய்த பிள்ளையார் கோவில் அடித்து நொருக்கப்பட்டுள்ளமை மிக வேதனைதரும் செய்தியாகும்.

இவ்விடயம் தொடர்பாக உடன் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரையும் ,வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சைவமக்கள் சார்பில் வேண்டுகிறேன்.

சமீபகாலமாக மன்னார் மாவட்டத்தில் பல சைவக் கோவில் விக்கிரகங்களை உடைத்து சைவ மக்களை வேதனைப்படுத்தும் சம்பவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மிருசுவில் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்டு தொடரும் நிகழ்வாகவே கருதவேண்டியுள்ளது.

இந்த நாட்டில் சுதேசிகளின் புராதன சமயமாக விளங்கும் சைவ சமயத்துக்கு தீங்கிளைப்பவர்களை உடன் நடவடிக்கை எடுத்து, சட்டத்தின் முன் தண்டிக்கவேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும்.

ஆறு.திருமுருகன்
உப தலைவர்
அகில இலங்கை இந்துமாமன்றம்.

– Advertisement –

What do you think?

உயர் நீதிமன்ற நீதியரசராக அர்ஜுன் ஒபேசேகரவை நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவையில் அனுமதி – Thamilan

மேல் நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஒப்புதல் – நீதித் துறையிலும் பல மாற்றங்களுக்கு பேரவை இணக்கம்