in

மிருசுவில் பிள்ளையார் ஆலயம் உடைப்புடன் ருத்ரசேனாவுக்கு தொடர்பு! – சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கண்டறிய பிரதமரின் அலுவலகம் நடவடிக்கை

மிருசுவில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீதானந்தன், அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

இந்த உடைப்புச் சம்பவத்துக்கும் ருத்ரசேனா என்ற அமைப்புக்கும் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தென்மராட்சி மிருசுவில் பகுதியில் வீதியோரமாக காணப்பட்ட சிறிய பிள்ளையார் ஆலயம் நேற்றுமுன்தினம் இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.
ஆலயம் இடித்தழிக்கப்பட்டமை தொடர்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதுதொடர்பில் இந்து விவகார அமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ச உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் வலியுறுத்தியிருந்தார்.

மிருசுவில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீதானந்தன் தெரிவித்தார்.

இதேவேளை, மிருசுவில் பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டமைக்கு இனவாத அமைப்பான ருத்ரசேனாவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

The post மிருசுவில் பிள்ளையார் ஆலயம் உடைப்புடன் ருத்ரசேனாவுக்கு தொடர்பு! – சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கண்டறிய பிரதமரின் அலுவலகம் நடவடிக்கை appeared first on Puthinam.

What do you think?

ஓய்வூதியம் செலுத்துவதற்காக அரச, தனியார் வங்கிகள் இரண்டு நாள்கள் திறக்கப்படும்

Sri Lanka & Ethiopia discuss enhancement of political & economic ties