in

முன்றாவது ரி-20 ஆட்டத்தில் பாகிஸ்தான் திகில் வெற்றி!! – போராடித் தோற்றது இங்கிலாந்து!

இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மூன்றாவது ரி-20 ஆட்டம் கடைசிப் பந்துப் பரிமாற்றம், கடைசி பந்து வரை பரபரப்பாக சென்றது. இங்கிலாந்து அணி வெற்றிக்காகப் போராடி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி துடுப்பாட்டத்தில் இரண்டாம் ரி-20 போலவே சிறப்பாக செயல்பட்டது. பந்துவீச்சில் சரியான நேரத்தில் இலக்குகளை வீழ்த்தியதால் இங்கிலாந்து அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.

ரி-20 தொடர்

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மூன்று ஆட்டங்கள் கொண்ட ரி-20 தொடரில் ஆடின. முதல் ஆட்டம் மழையால் தடைபட்ட நிலையில், இரண்டாம் ரி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி அபார ஆட்டம் ஆடி 196 என்ற இலக்கைத் துரத்திப் பிடித்தது.

மூன்றாவது ரி-20

மூன்றாவது ரி-20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நாணயச் சுழற்சியில் வென்று களத்தடுப்பைத் தெரிவு செய்தது. பாகிஸ்தான் அணிக்கு பாக்கர் ஜமான் (ஒரு ஓட்டம்), பாபர் ஆசாம் (21 ஓட்டங்கள்) சுமாரான ஆரம்பம் அளித்தனர். அடுத்து இணைந்த ஹைதர் அலி – முகமது ஹபீஸ் அதிரடி ஆட்டம் ஆடினர்.

ஹைதர் அலி அரைசதம்

ஹைதர் அலி 33 பந்துகளில் 54 ஓட்டங்கள் குவித்தார். அவர் 5 நான்கு ஓட்டங்கள், 2 ஆறு ஓட்டங்கள் விளாசினார். அவர் ஆட்டமிழந்த பின் ஷதாப் கான் (15 ஓட்டங்கள்), இமாத் வாசிம் (ஆட்டமிழக்காமல் 6 ஓட்டங்கள்) ஆகியோருடன் சேர்ந்து ஹபீஸ் அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஹபீஸ் அதிரடி ஹபீஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 86 ஓட்டங்கள் குவித்தார். 4 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் என இரண்டாவது ஆட்டம் போலவே இந்த ஆட்டத்திலும் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்து அசத்தினார்.
பாகிஸ்தான் அணி 20 பந்துப் பரிமாற்றங்களில் 4 இலக்குகள் இழப்புக்கு 190 ஓட்டங்களை எடுத்தது.

இங்கிலாந்து பந்துவீச்சு

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மொயீன் அலி, டாம் கர்ரன் ஆகியோர் தலா ஓர் இலக்கையும், ஜோர்டான் இரு இலக்குகளையும் வீழ்த்தினர். ரஷித் 3 பந்துப் பரிமாற்றங்களில் 40 ஓட்டங்களும், கிரிகோரி 4 பந்துப்பரிமாற்றங்களில் 41 ஓட்டங்களும் கொடுத்துச் சொதப்பி இருந்தனர்.

இங்கிலாந்து வெல்லும்
என்ற எதிர்பார்ப்பு

191 ஓட்டங்கள் என்ற பெரிய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துரத்தத் தொடங்கியபோது இரண்டாவது ஆட்டம் போலவே எளிதாக அந்த அணி வெல்லும் என்றே அனைவரும் கணித்தனர். ஆரம்பத் துடுப்பாட்ட் வீரர் பேர்ஸ்டோ ஓட்டமெதுவும் பெறாது வெளியேறி ஏமாற்றினார்.

இலக்குகள் வீழ்ச்சி

அவரைத் தொடர்ந்து மலன் (7 ஓட்டங்கள்), இயான் மார்கன் (10 ஓட்டங்கள்) அடுத்தடுத்து வெளியேறினர். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டாம் பான்டன் 31 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்தார். இதுவரை சோபிக்காத மொயீன் அலி வெறியாட்டம் ஆடினார். மறுபுறம் சாம் பில்லிங்க்ஸ் (26 ஓட்டங்கள்), கிரிகோரி (12 ஓட்டங்கள்), ஜோர்டான் (ஓர் ஓட்டம்) வரிசையாக வெளியேறினர்.
கடைசி 3 பந்துப் பரிமாற்றங்களில் 30 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது பாகிஸ்தான் அணி 18ஆவது பந்துப்பரிமாற்றத்தில் ஓர் இலக்கையும், 19 ஆவது ஓவரில் மொயீன் அலி உட்பட 2 இலக்குகயும் வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

கடைசி பந்துப் பரிமாற்றம்

மொயீன் அலி 33 பந்துகளில் 61 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் சென்ற பின் கடைசிப் பந்துப் பரிமாற்றத்தில் 17 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. அப்போது களத்தில் டாம் கர்ரன், அதில் ரஷித் இருந்தனர். இருவரும் 4 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்தனர். 2 பந்துகளில்
கடைசி 2 பந்துகளில் 2 ஆறு ஓட்டங்கள் பெற்றால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலையில், டாம் கர்ரன் 5ஆவது பந்தில் ஆறு ஓட்டம் அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் கடைசிப் பந்தை அவரால் தொட முடியவில்லை.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வென்று ரி-20 தொடரை 1 – 1 எனச் சமன் செய்தது. பாகிஸ்தான் பந்துவீச்சு பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் 4 ஓவரில் 48 ஓட்டங்கள் கொடுத்து ஏமாற்றினாலும், வஹாப் ரியாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி தலா இரு இலக்குகளையும், இமாத் வாசிம், ஹாரிஸ் ராப் ஆகியோர் தலா ஓர் இலக்கையும் வீழ்த்தி வெற்றிக்கு வழிகோலினர்.
அதிரடியாக ஆடி 86 ஓட்டங்கள் குவித்த ஹபீஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

What do you think?

20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி!!

யாழ். நகரில் மடக்கிப் பிடிக்கப்பட்ட கஞ்சா வியாபாரி!!