in

மும்பையிடம் இலகுவாக வீழ்ந்தது கொல்கத்தா!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 5ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 49 ரன்களால் வெற்றியீட்டியது.

இந்த ஆட்டம் இன்று அபுதாபியில் நடைபெற்றது. மும்மை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர் அணியும் மோதிக் கொண்டன.

டொஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக அணித் தலைவர் ரோகித் சர்மா 80 ரன்கள் குவித்தார்.

கொல்கத்தா அணியின் ஷிவம் மாவி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய கில் 7 ரன்னிலும், சுனில் நரைன் 9 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அணித் தலைவர் தினேஷ் கார்த்திக் 30 ரன்னிலும், நிதிஷ் ரானா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரசல் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்து வீச்சில் போல்ட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஏனைய வீரர்களும் மும்பை அணியின்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதி கட்டத்தில் சற்று அதிரடியாக ஆடிய கம்மின்ஸ் அதிகபட்சமாக 12 பந்துகளில் 4 சிக்சர்கள் உள்பட 33 ரன்கள் குவித்து பேட்டிசன் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

ஆனால், மும்பை அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை மும்பை இந்தியன்ஸ் அணித் தலைவர் ரோகித் சர்மா பெற்றார்.

What do you think?

Watch : Massive fire in a hotel in Bandarawela

அரச அலுவலகத்துக்குள் திடீரென புகுந்த கோட்டாபய! – திக்குமுக்காடிய அதிகாரிகள்!