in

மேல் நீதிமன்ற நீதிபதி சசிமகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஒப்புதல் – நீதித் துறையிலும் பல மாற்றங்களுக்கு பேரவை இணக்கம்

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசராக நியமிக்க நாடாளுமன்றப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அத்துடன், நீதித்துறையில் பல புதிய நியமனங்களுக்கும் சபாநாயகர் தலைமையிலான நாடாளுமன்றப் பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதன்படி, மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரான நீதியரசர் அர்ஜுனா ஒபசேகரவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்வைத்த பரந்துரைக்கு பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிரா டி அப்ரூ ஓய்பெற்றதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ஒபசேகர நியமிக்கப்படவுள்ளார்.

இதற்கிடையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் கே.பி.பெர்னாண்டோவை நியமிக்கும் பரிந்துரைக்கும் பேரவை ஒப்புதல் அளித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நீதியரசர் கே.பி.பெர்னாண்டோ நியமிக்கப்பட்டதன் மூலம் உருவான வெற்றிடத்தை நிரப்ப மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரனை நியமிக்க நாடாளுமன்றப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சிசிரா டி அப்ரூ ஓய்வு பெற்றதன் மூலம் நீதிச் சேவை ஆணைக்குழு உறுப்பினருக்கு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி தெஹிதெனியாவை நியமிக்க பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

– Advertisement –

What do you think?

மிருசுவில் பிள்ளையார் ஆலயம் அழிக்கப்பட்டுள்ளமை திட்டமிட்டு தொடரும் நிகழ்வு; நடவடிக்கை எடுக்க ஆறு.திருமுருகன் வலியுறுத்து

ரணில் விக்ரமசிங்கவால் 50 உறுப்பினர்களை எதிர்கொள்ள முடியாது- ராஜித எம்.பி. – Thamilan