in

யாழ்ப்பாணத்தில் இன்றும் தங்கத்தின் விலை ஏறுமுகம்!!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்றும் ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. தூய 24 கரட் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்படுகின்றது.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை 3 ஆயிரத்து 500 ரூபாவால் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் தங்கத்தின் மீதான 15 வீத வரி முழுமையாக நீக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி வெளியான இந்த அறிவிப்பால் தங்கத்தில் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி நடக்கவில்லை.

யாழ்ப்பாணத்தில் இன்று (12) திங்கட்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 95 ஆயிரத்து 800 ரூபாவாகக் காணப்படுகின்றது. கடந்த வாரம் ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 92 ஆயிரத்து 600 ரூபாவாக இருந்தது.

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 500 ரூபாவாக இருக்கின்றது.

What do you think?

வீடுகளுக்கு அனுப்பப்பட்ட யாழ். கல்வியியல் கல்லூரி ஆசிரிய மாணவர்கள்!

பியகமவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியருக்கும் கொரோனா!!