in ,

யாழ்ப்பாணத்தில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் இன்று கொரோனா தொற்று 11 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழக ஆய்வுகூடத்தில் 110 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 6 பேர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த 5 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, முல்லேரியா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் இருந்து வந்த முடிவுகளில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மருதனார்மடம் சந்தையில் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனையில் மூவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இளவாலை, மல்லாகம், அளவெட்டியைச் சேர்ந்தவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மருதனார்மடம் கொத்தணியில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

What do you think?

39 year old woman among 6 Covid deaths reported today

Sri Lanka seeks Rs 10 billion World Bank loan to buy COVID-19 vaccine – Sunday Times