in

யாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்ற உறுதி!!

யாழ்ப்பாணத்தில் இன்று 9 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்று வடக்கு மகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

8 பேர் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவர்கள் மருதனார்மடத்தில் முன்னர் தொற்றுடன் இனங்காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களாவர்.

யாழ்ப்பாணம் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் இன்று 240 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன என்றும் அதிலேயே 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

What do you think?

Vaccinated US nurse contracts COVID-19, expert says Pfizer shot needed more time to work – ABC

More tourists test positive for Covid, ‘Do not panic. We are ready for this’ : Health Ministry