in

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலையில் தளம்பல்!!

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை அதிகரித்திருந்த நிலையில், கடந்த இருநாள்களாக தங்கத்தின் விலை சற்றுச் சரிந்திருந்தது. ஆனால் மீண்டும் இன்று தங்கத்தின் விலை 300 ரூபாவால் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏறுமுகத்திலேயே உள்ளதால் உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை குறையச் சாத்தியம் இல்லை என்று கூறப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்று (16) 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 95 ஆயிரத்து 150 ரூபாவாகக் காணப்பட்டது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கத்தின் விலை 94 ஆயிரத்து 900 ரூபாவாக இருந்தது.

24 கரட் தூய தங்கத்தின் விலை இன்று ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 800 ரூபாவாகக் காணப்பட்டது.

What do you think?

WFP, FAO warn increase in rates of malnutrition in Sri Lanka a real risk

அரியாலையில் மணல் அகழ்ந்தவர் மதில் வீழ்ந்து உயிரிழப்பு!!