in

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை மீண்டும் ஏறுமுகம்!!

தங்கத்தின் விலை யாழ்ப்பாணத்தில் பவுணுக்கு ஆயிரம் ரூபாவால் நேற்று அதிகரித்தது.

கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 500 ரூபாவால் உயர்ந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று (18) ஒரு பவுண் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 96 ஆயிரத்து 700 ரூபாவாக இருந்தது.

24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாவாகக் காணப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றால் தற்போது சர்வதேச பங்குச் சந்தையில் தளம்பல் நிலை காணப்படுகின்றது. உலகப் பொருளாதாரமும் சரிந்துள்ளது.

அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். தங்கத்தின் கேள்வி அதிகரித்துள்ள நிலையில், அதன் விலையும் நாளுக்கு நாள் அதிரித்து வருகின்றது.

What do you think?

கூட்டமைப்பின் கொறடா பதவியிலிருந்து விலகினார் சிறிதரன் எம்.பி.!!

கொரோனா சுழலுக்குள் நேற்றும் 660 பேர்!! – ஐவர் உயிரிழப்பு!!