in ,

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று!!

யாழ்ப்பாணத்தில் மேலும் மூவருக்கு இன்று (21) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா மருத்துவனை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையிலேயே இவர்களுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்பாயைச் சேர்ந்த ஒருவருக்கும், இணுவிலைச் சேர்ந்த ஒருவருக்கும், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த ஒருவருக்குமே தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோப்பாய் மற்றும் ஊர்காவற்றுறையைச் சேர்ந்த இருவரும் மருதனார்மடம் சந்தைக்குச் சென்று வந்தவர்கள்.

இணுவிலைச் சேர்ந்தவர், ஏற்கனவே இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன் தொடர்பில் இருந்தவர்.

இவர்கள் மூவரும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர் என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இவர்களுடன் சேர்த்து மருதனார்மடம் கொரோனா கொத்தாணில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது.

What do you think?

National Research Council yet to receive Dhammika Bandara’s proposal on Covid syrup

ஒரு லட்சம் வேலை வாய்ப்பில் அரசியவாதிகள் தலையீடு!! – பலரின் வாய்ப்பு பறிபோகிறது?