in

ரயில் முன் பாய்ந்த கிளிநொச்சி மாணவனுக்கு உயர்தரத்தில் 3ஏ!! – நடந்தது என்ன?

இன்று காலை கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி உயிரிழந்த மாணவன் தவறான முடிவெடுத்து ரயில் முன் பாய்ந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

கிளிநொச்சி மலையாளபுரத்தைச் சேர்ந்த யோகேந்திரன் அயந்தன் (வயது-21) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றில் தான் உயிரைவிடப் போவதாகப் பதிவொன்றை இட்டுள்ளார்.

 

இவர் வணிகப் பிரிவில் 3 ஏ சித்தி பெற்றுள்ள நிலையில், இவ்வாறான முட்டாள்தனமான முடிவெடுத்தமை அந்தப் பிரதேச மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாணவன் மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை விறகு சேகரித்து விற்றே குடும்பத்தைக் கவனித்து வருகின்றார்.

இவர் தனது முகநூல் பதிவில்,

I will die உலகில் புகைத்தல், மது போதை இதெல்லாம் நினைத்தவுடுன் விட்டுவிடலாம். அவர்கள் தங்களுக்கு என்று ஒரு எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இவர்கள் கல்லூரிக்குப் போகலாம். ஆனால் இவற்றையெல்லாம் விட கொடுமையான நோய், பயங்கரமான நோய் உயிர்கொல்லி நோய்

– என்று பதிவிட்டுள்ளார்.

உயிரை விட எடுக்கப்படும் முடிவுகள் முட்டாள்தனமானவை என்பதை இளைஞர், யுவதிகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த மாணவனின் தந்தையினதும், குடும்பத்தினதும் பல ஆண்டு கடின உழைப்பும், தியாகங்களும் ஒரு நொடியில் அழிந்துவிட்டன.

இவ்வாறான முட்டாள்தனமான முடிவுகளை கைவிட்டு வாழ்க்கையை எதிர்கொள்ள இளைஞர், யுவதிகள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

What do you think?

தெறிக்கவிட்ட தேவ்தத்!! – பெங்களூர் 10 ஓட்டங்களால் வெற்றி!!

பகிடிவதையில் ஈடுபட்ட 8 மாணவர்களுக்கு வாழ் நாள்த் தடை விதிக்க ஆயத்தம்!!