in

35 கிலோ கிராம் கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் பருத்தித்துறையில் கைது

கஞ்சா போதைப்பொருளை வீட்டில் பதுக்கிவைத்திருந்த குற்றச்சாட்டில் 20 வயது இளைஞன் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை இன்பசிட்டியில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர்.

சந்தேக நபரிடமிருந்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்போருள் கைப்பற்றப்பட்டது.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை, காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்து வந்த 150 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தற்போதைய கோரோனா பரவல் நிலமையை அடுத்து கஞ்சா போதைப்பொருள் பொதியை எரியூட்டி அழிக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

The post 35 கிலோ கிராம் கஞ்சாவுடன் 20 வயது இளைஞன் பருத்தித்துறையில் கைது appeared first on Puthinam.

What do you think?

கல்முனையில் போதைப்பொருள் வர்த்தகர் உள்ளிட்ட நால்வர் கைது – Thamilan

AG produces in court 800 charges against Hemasiri and Pujith over Easter attacks