ஈழத் தாயகத்திலும், தமிழகத்திலும், தரணிப் பரப்பெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் எல்லோரையும் – உணர்வாலும், சிந்தனையாலும், அறிவாலும், நோக்கத்தாலும், செயலாலும் – இலங்கைத் தீவின் தமிழர் நிலத்திலிருந்து இணைக்கும் முயற்சியே யாழ்புதினம்.

அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என்று எந்தப் பக்கமும் சாராமல் – மக்கள் பக்கமே இருந்து, அவர்களிடம் உண்மையை மட்டுமே எடுத்துச் செல்லும் ஊடகமாக நிலைக்க வேண்டும் என்ற யாழ்புதினத்தின் எண்ணம்.

பத்தோடு பதினொன்றாக ஆகிவிடாமல், அந்தப் பத்தும் விட்டுச் செல்கின்ற இடைவெளிகளையும் சேர்த்து இட்டு நிரப்பி, காலத் தேவைக்கேற்ற தெளிவை மக்களுக்கு குறைவற்று வழங்கிச் செல்ல வேண்டும் என்பதே யாழ்புதினத்தின் தீர்மானம்.

கோட்பாடுகள் சார்ந்தோ, சிந்தனைகள் சார்ந்தோ, துறை சார்ந்தோ – எந்த வட்டத்துக்குள்ளும் சுருங்கி விடாமல் – வெறும் அரசியல் மயப்பட்டதாகவும் ஆகிவிடாமல் – ஒரு பரந்த தளத்தில், தமிழ் பேசும் மக்களின் உயர்ச்சி சார்ந்த கருத்துக்களையும் முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே யாழ்புதினத்தின் நோக்கம்.

பொதுவான தமிழ் இணையப் பழக்கத்தினின்றும் மாறுபட்டு – சொல்லுகின்ற செய்திகளும், செய்கின்ற ஆய்வுகளும், அளிக்கின்ற வாக்குமூலங்களும் பொறுப்புவாய்ந்தனவாக இருக்க வேண்டும் என்ற அதியுச்ச நெறிமுறைகளோடு இயங்க வேண்டும் என்பதே யாழ்புதினத்தின் அவா.

 

ஆசிரிய பீடம்.

contact [@] yarlputhinam.com